தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மணிரத்னம் இயக்கி உள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் புரமோசனுக்காக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்த படக்குழு நேற்று சென்னையில் தனது பயணத்தை முடித்துக் கொண்டது.
இந்த நிறைவு நிகழ்ச்சியில் கார்த்தி பேசியதாவது: கல்லூரியில் 4 ஆண்டுகள் படித்து விட்டு விடைபெறுவது போன்று உள்ளது. இந்த படம் காலத்திற்கும் நிலைத்து நிற்க வேண்டும் என்ற நோக்கத்தில் மணிரத்னம் இயக்கி உள்ளார். படம் வெற்றியோ தோல்வியோ இது தமிழ் சினிமாவின் முக்கிய படம் என்றார் ஏ.ஆர்.ரகுமான். ஒரு வெற்றி பெற்ற கதையில், ஒரு வெற்றி பெற்ற படத்தில் நாங்கள் இருந்திருக்கிறோம். இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு சென்றோம். சிலர் 'பேஷன் ஷோ' நடத்துகிறார்கள் என்று கிண்டல் செய்தார்கள். ஆனால் நாங்கள் தமிழ்நாட்டை இந்திய நகரங்களில் பிரதிநிதித்துவப்படுத்தினோம்.
மணிரத்னத்தின் கனவுப் படம் இது. ஆனால் கேட்டால் அவர் இது கனவுப் படம் என்பதையே சொல்லமாட்டார். ராஜ ராஜ சோழனை காட்சிப்படுத்த அவர் எடுத்த மெனக்கெடலை நேரில் பாத்திருக்கிறேன். காலத்திற்கும் நிற்கவேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். இந்தப் படத்தை அவர் ரசித்து இயக்கினார். இந்த படத்தில் நடித்த நாங்கள் தொடர்ந்து இணைந்திருப்போம். என்றார்.
த்ரிஷா பேசியதாவது: சென்னையில் தொடங்கி சென்னையில் புரமோஷனை முடிக்கிறோம். படத்தின் மீது பயங்கரமான எதிர்பார்ப்பு இருக்கிறது. மணிரத்னத்தின் இயக்கத்தில் வேலை பார்த்ததை பெருமையாக கருதுகிறேன். மணிரத்னத்தின் 'குந்தவை' நான் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை. எனக்கு சிறந்த நண்பர்களாக பொன்னியின் செல்வன் படக்குழு கிடைத்துள்ளது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவியுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் வேலை பார்த்தது வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத இனியமையான அனுபவமாக இருக்கும். இந்தக் குழுவுடன் பயணிக்கும்போது ஒரு பெண்ணாக மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன். என்றார்.