தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்க 2011ல் வெளிவந்த படம் 'தெய்வத் திருமகள்'. அப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன். தொடர்ந்து தமிழில் “சித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு, சில்லு கருப்பட்டி” உள்ளிட்ட படங்களிலும், சில ஹிந்திப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராயின் டீன் ஏஜ் பருவ கதாபாத்திரத்தில் சாரா அர்ஜுன்தான் நடித்துள்ளார். முதல் பாகத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்தவர், இரண்டாம் பாகத்தின் டைட்டில் காட்சிகளிலும், அதற்குப் பிறகான சில காட்சிகளிலும் நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இளம் பெண்ணாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
அவரது கதாபாத்திரத்தையும், நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் டுவிட்டரில், விக்ரமுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “நிலா டூ நந்தினி, தெய்வத் திருமகள், பொன்னியின் செல்வன் 2, சீயான் சார்,” என ஹாட்டின் எமோஜியுடன் குறிப்பிட்டுள்ளார். அதை ரிடுவிட் செய்து விக்ரம், “உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்,” எனப் பாராட்டியுள்ளார்.