தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

விஜய் ஆண்டனி, தயாரித்து, இசை அமைத்து இயக்கி உள்ள படம் பிச்சைக்காரன் 2. வருகிற 19ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தில் காவ்யா தாப்பர் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று மலேசியாவில் உள்ள லங்கா தீவில் நடந்தது. அப்போது விஜய் ஆண்டனி படகு மோதி விபத்துக்குள்ளானார். நீண்ட நாள் சிகிச்சைக்கு பிறகு தற்போது அவர் உடல் நலம் தேறி உள்ளார். இந்த படத்தின் அறிமுக விழாவில் பேசிய விஜய் ஆண்டனி விபத்து குறித்து உருக்கமாக கூறினார். அப்போது தன் உயிரை காப்பாற்றியது காவ்யா தாப்பர்தான் என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும்போது ஹீரோக்களுக்கு விபத்து ஏற்பட்டுதான் கேள்விப்பட்டிருப்பீர்கள், எனக்கு காதல் காட்சியில் நடித்தபோது விபத்து ஏற்பட்டது. கடலில் ஓடும் பைக்கில் நானும், காவ்யா தாப்பரும் பாடலுக்கு ஏற்ப பயணிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இன்னொரு படகில் இருந்து ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் அதை படமாக்கினார். இரண்டு சுற்றுகள் அவர்களின் படகை நான் பைக்கில் சுற்ற வேண்டும்.
முதல் சுற்றை வெற்றிகரமாக முடித்து விட்டேன். இரண்டாவது சுற்றின் போது படகின் விழிம்பில் மோதி கடலுக்குள் தூக்கி வீசப்பட்டேன். அப்போது எனது பின்னால் இருந்த காவியா தாப்பரும், ஓம் பிரகாசின் உதவியாளர் அர்ஜூன் என்பவரும்தான் என் உயிரை காப்பாற்றினார்கள். நான் மறுபிறவி எடுத்து வந்து இப்போது இங்கு வந்து பேசுவதற்கு அவர்கள்தான் காரணம். இப்போது நான் நன்றாக இருக்கிறேன். சின்ன சின்ன பிரச்னைகள் இருந்தாலும், முன்பை விட இன்னும் கூடுதல் உற்சாகத்துடன் இருக்கிறேன். என்றார்.