திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மணிரத்னம் இயக்கத்தில், பெரும் பொருட்செலவில் தயாரான 'பொன்னியின் செல்வன் 2' படம் கடந்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி வெளியானது. படம் வெளியான நான்கே நாட்களில் 200 கோடி வசூலைக் கடந்துவிட்டது.
சுமார் 200 கோடி ரூபாய் செலவில் இரண்டு பாகங்களாகத் தயாரானதாக சொல்லப்படும் இப்படம் முதல் பாகத்திலேயே 500 கோடி வசூலைக் கடந்து பெரும் லாபத்தைக் குவித்துவிட்டது. இந்த இரண்டாம் பாகம் என்பது கூடுதல் லாபம்தான். அது மட்டுமல்ல ஓடிடி, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றின் மூலமே 100 கோடி கூடுதல் வருமானத்தையும் பார்த்தது.
முதல் பாக வசூலான 500 கோடியை இரண்டாம் பாகம் கடக்குமா என்பது சந்தேகமாக இருந்தாலும் 300 கோடி வசூலைக் கடந்து இந்த ஆண்டில் அதிக வசூலைக் குவித்த 'வாரிசு' வசூலை இப்படம் நிச்சயம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இன்று இரண்டாவது வாரத்தைத் தொட்டுள்ள இப்படத்தின் வசூல் நாளையும், நாளை மறுநாளும் சிறப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் பாகத்தில் மணிரத்னம் கதையையும், கிளைமாக்சையும் மாற்றிவிட்டார் என்ற கருத்துப் பரவல் படத்தின் வசூலைக் கொஞ்சம் பாதித்துள்ளதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.