தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

லியோ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 68வது படத்தை இயக்குபவர்கள் பட்டியலில் அட்லீ, கார்த்திக் சுப்பராஜ், கோபிசந்த் மாலினேனி ஆகிய இயக்குனர்களின் பெயர்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அது அனைத்தும் வதந்திகள், விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு தான் இயக்குகிறார் என்பது போன்று இன்னொரு செய்தி பரபரப்பாக வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கும் படங்கள் என்றாலே யுவன் சங்கர் ராஜா தானே இசையமைப்பார் என்பதால் விஜய் 68- வது படத்துக்கு அவரே இசையமைப்பார் என்ற செய்திகளும் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பில்லை.
வாரிசு படத்திற்கு பிறகு விஜய் தெலுங்கு ரசிகர்களுக்கும் பரீட்சயமான நடிகராகி விட்டதால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் ஒருவரைதான் இந்த படத்திற்கு இசையமைக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது லியோ படத்துக்கு இசையமைத்து வரும் அனிருத்தே, விஜய் 68வது படத்திற்கும் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் விஜய்யை வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் கூட யுவன் சங்கர் ராஜாவினால் இடம்பெற முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்படி என்னதான் பரபரப்பான செய்திகள் வெளியானபோதும், விஜய்யை வெங்கட் பிரபு இயக்குவதாக வெளியாகி உள்ள செய்திகள் கூட அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்போதுதான் அது உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.