தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இசை அமைப்பாளர் தேவாவுடன் மேடை கச்சேரிகளில் கீ போர்ட் வாசித்து வந்த அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா பாண்டியராஜன் இயக்கிய 'டபுள்ஸ்' படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, ஜித்தன், சிவகாசி, சாணக்யா, தலைமகன், ஆழ்வார், பழனி, வைத்தீஸ்வரன், நேபாளி, பாண்டி, துள்ளி விளையாடு, பூலோகம், ஆதார், தெற்கத்தி வீரன் உள்பட ஏராளமான படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
ஆரம்பகால கட்டத்தில் பெரிய ஹிட்களை கொடுத்த ஸ்ரீகாந்த் தேவா அதன்பிறகு ஏனோ இசையில் பெரிதாக சாதிக்கவில்லை. பட வாய்ப்புகளும் குறைந்தது, சிறிய பட்ஜெட் படங்களுக்கு இசை அமைத்து வந்தார். இந்த நிலையில் அவர் 100 படங்களுக் கு இசை அமைத்து முடித்துள்ளார். அவர் இசை அமைத்துள்ள 100வது படம் 'பிரியமுடன் ப்ரியா'. கோல்டன் மூவீஸ் சார்பில் ஏ.ஜே.சுஜித், தயாரித்து, இயக்கி உள்ளார். முருகா அசோக் நாயகனாகவும், லீசா நாயகியாகவும் நடித்துள்ளனர். ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஸ்ரீகாந்த் தேவா பேசியதாவது: எங்கள் குடும்பம் இசை குடும்பம் என்றாலும் எனக்கு இசை ஆர்வம் இல்லை, படிப்பிலும் ஆர்வம் இல்லை. அப்பா, சித்தப்பா இசை வாசிப்பதை வேடிக்கை பார்ப்பேன். திடீரென்று ஒரு நாள் அப்பா நீ படித்து என்னவாக போகிறாய் என்று கேட்டார். படிப்பில் இருந்து தப்பிக்க எனக்கு படிப்பு வரமாட்டேங்குது எனக்கு கீ போர்ட் வாங்கித் தாங்க நான் கீபோர்ட் பிளேயராகப்போறேன் என்றேன். உங்க பெயரையும் காப்பாற்றுவேன் என்றேன். சரி உனக் கு எது பிடிக்குதோ அதைச் செய் என்று சொல்லி அப்போதே காஸ்ட்லியான கீ போர்ட் வாங்கித் தந்தார். அப்பா பெயரை ஓரளவுக்கு காப்பாற்றி விட்டதாக நினைக்கிறேன். எனக்கு அவர் அப்பா மட்டுமல்ல காட்பாதர்.
முதல் பட வாய்ப்பு கொடுத்த பாண்டியராஜன் சார், விஜய் பட வாய்ப்பு கொடுத்த பேரரசு சார். எனக்கு மானசீக குருவாக இருந்த இளையராஜா சார், கங்கை அமரன் சார், நேரடி குருக்களாக இருந்த அப்பா, சித்தப்பா, எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பளார்கள், இயக்குனர்கள், சக இசை கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.