படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த ஓரிரு வருடங்களாக பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் நரேஷ் - பவித்ரா. மறைந்த நடிகர் கிருஷ்ணா மனைவியின் மகனும், முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் அண்ணனுமான நரேஷ் இதற்கு முன்பு மூன்று திருமணங்களைச் செய்தவர். அவர் கன்னடத்திலிருந்து தெலுங்கில் நடிக்க வந்த அம்மா வேட நடிகை பவித்ராவைக் காதலிப்பதாக செய்திகள் பரவியது. நரேஷின் மூன்றாவது மனைவி செய்த தகராறால் நரேஷ் - பவித்ரா காதல் உண்மை என்று வெளிச்சத்திற்கு வந்தது.
நரேஷ், பவித்ரா இருவரும் அவர்களது சொந்த வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள 'மல்லி பெல்லி' என்ற படத்தில் நடித்துள்ளார்கள். அந்தப் படத்தின் புரமோஷன் என சில வீடியோக்களும் வெளிவந்தது. அது அவர்களது சொந்த வாழ்க்கையைப் போல இருந்ததால் அதையும் உண்மை என்று நம்பி பலரும் செய்திகளை வெளியிட்டார்கள். அப்படம் நேற்று தெலுங்கில் வெளியாகிள்ளது. படத்தைப் பார்த்தபின்புதான் அவர்களது சொந்தக் கதையையே சில மாற்றங்களுடன் படமாக்கியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
படத்தின் இயக்குனரான எம்எஸ் ராஜு, நரேஷ் கொடுத்த பல விஷயங்களுடன் சேர்த்து படத்தை உருவாக்கியிருக்கிறாராம். நரேஷின் மூன்றாவது மனைவியாக வனிதா விஜயகுமார் நடித்துளளாராம். படத்திற்கு விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக இல்லை என்றாலும் நரேஷ் - பவித்ரா காதல் சர்ச்சையை வைத்தே படத்தை ஓட்டிவிடலாம் என நினைக்கிறார்களாம்.