மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நடிகர் விக்ரம் பிரபு, தொடர் தோல்வியில் இருந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் ' திரைப்படத்தில் 'பார்த்திபேந்திரன் பல்லவன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்ற உற்சாகத்தில் உள்ளார். அந்த உற்சாகத்தோடு தனது அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. வாணி போஜன், தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாகர் இசையமைத்துள்ள இந்த படத்தை கே. எம்.எச் புரொடக்சன்ஸ் மற்றும் எஸ்.பி சினிமாஸ் இரு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் 'பாயும் ஒளி நீ எனக்கு' திரைப்படம் வருகின்ற ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.