தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தில் பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படம் சரித்திர பின்னணி கொண்ட கதையில் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் டென்மார்க் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்கள். அங்குள்ள தனது ரசிகர்களுடன் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த சுற்று பயணத்தை முடித்துவிட்டு சூர்யா சென்னை திரும்பியதும் கங்குவா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது.