மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
பழம்பெரும் பாலிவுட் நடிகர் நசுருதீன் ஷா. தற்போதும் பிசியாக நடித்து வருகிறார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு கிளப்புவார். அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் விருதுகள் குறித்து கருத்து கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:
தற்போது சினிமா துறையில் இருக்கும் நடிகர்களில் ஒருவரை தேர்வு செய்து அவரை இந்த ஆண்டின் சிறந்த நடிகர் என்று யாரோ அறிவிப்பது எந்த அளவுக்கு சரியானது? என்று தெரியவில்லை. நடிப்புக்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறார்கள் என்றும் புரியவில்லை. விருது கொடுப்பவர்களுக்கு நடிப்பு பற்றி என்ன தெரியும் என்றும் தெரியவில்லை. விருதுகளைப் பார்த்து நான் பூரித்துப் போக மாட்டேன். சமீபத்தில் எனக்கு அறிவித்த இரண்டு விருதுகளை வாங்கிக் கொள்ளகூட நான் செல்லவில்லை. ஆரம்பத்தில் விருதுகள் வந்தபோது மிகவும் மகிழ்ந்தேன். அதன் பிறகு விருதுகள் எப்படி வருகின்றன என்பது தெரிந்ததும் அவற்றின் மீது எனக்கு இருந்த ஆர்வம் போய்விட்டது.
ஏதேதோ பெயர்களால் விருதுகளை கொடுக்கிறார்கள். அவற்றால் எனக்கொன்றும் பெருமையாக இல்லை. எனக்கு நிறைய விருதுகள் வந்துள்ளன. ஒருவேளை நான் பண்ணை வீடு கட்டிக் கொண்டால் அதில் பாத்ரூம்களுக்கு கைப்பிடியாக இந்த விருதுகளை வைத்துக் கொள்வேன். நான் ஜனாதிபதி கையால் பெற்ற பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளைப் பெற்றபோது மட்டும் மிகவும் சந்தோஷப்பட்டேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.