மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
விஜயகாந்த் பெரும்பாலும் கமர்ஷியல் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ளார். சில காதல் மற்றும் குடும்ப கதைகளில் நடித்துள்ளார். அவர் நடித்த புராண படம் 'நவகிரக நாயகி'. புராண படங்களுக்காகவே பெயர் பெற்ற கே.சங்கர் இந்த படத்தை இயக்கினார். சில நாட்டுப்புற கதைகளையும், புராண கதைகளையும் தொகுத்து இந்த படம் உருவானது. நாரதர் கேரக்டரில் சோ நடித்திருந்தார்.
கே.ஆர்.விஜயா ஆதிபராசக்தியாக நடித்திருந்தார், இதில் வரும் ஒரு கதையில் விஜயகாந்த் நடித்திருந்தார். இளவரசியை காப்பாற்றியதால் 3 நாள் ராஜ வாழ்க்கையும், அடுத்த நாள் மரண தண்டனையும் விதிக்கப்படும் ஒரு கேரக்டரில் நடித்தார்.
விஜயகாந்த் தவிர, ஸ்ரீவித்யா, அனுராதா, பாண்டியன், நளினி, சுரேஷ், சசிகலா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். படம் போதிய வரவேற்பை பெறவில்லை.
இதே கே சங்கர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த மற்றொரு புராண படம் மீனாட்சி திருவிளையாடல். இதில் சிவனாக விஜயகாந்த், மீனாட்சியாக ராதா நடித்தனர்.