தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இயக்குனர் லிங்குசாமி என்னதான் நிதி பிரச்சினையில் சிக்கி தவித்தாலும் தமிழ் பணியில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறார். ஆண்டுதோறும் கவிஞர் அப்துல் ரகுமான் நினைவாக ஹெக்கூ கவிதை போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு நடந்த போட்டியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
அதேபோல இந்த ஆண்டு நடந்த போட்டியில் வென்றவர்களுக்கு சன்மானம் வழங்கப்பட்டதுடன் இதில் வென்ற 50 ஹைக்கூ கவிதைகளும் புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கனிமொழி கலந்து கொள்ளவில்லை. என்றாலும் இயக்குனர் லிங்குசாமி கனிமொழியை சந்தித்து கவிதை தொகுப்பை வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "கவிஞர் கனிமொழி கடந்த வருடம் துவங்கி வைத்த முதல் வருடத்திய ஹைக்கூ போட்டியில் வெற்றி பெற்ற ஹைக்கூ கவிதைகள் தொகுக்கப்பட்ட புத்தகத்தை அவரிடம் வழங்கினேன். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக முதல் வருடம் நிறைவடைந்து உள்ளது என்கிற மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு நன்றியையும் தெரிவித்தேன். மேலும் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதால் எனது வாழ்த்துக்களையும் கனிமொழி எம்.பியிடம் தெரிவித்தேன். இந்த சந்திப்பின்போது கவிஞர் அறிவுமதியும் உடன் இருந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி" என்று கூறினார்.
.