தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‛லியோ'. திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூரலிகான் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. லோகேஷின் முந்தைய படத்தை போன்று இதிலும் எல்சியு இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது படத்தை பற்றிய ஒரு அப்டேட்டை லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளார். சற்றுமுன் ரெடியா என அவர் டுவீட் போட்டது முதலே விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாட்டத்தை துவக்கினார்கள்.
இந்நிலையில் வருகிற ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பாடலை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். ‛‛நா ரெடி...' என குறிப்பிட்டுள்ள அந்த பாடல் பற்றி வெளியிடப்பட்ட போஸ்டரில் கையில் துப்பாக்கி உடன் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இருக்க, பின்னணியில் நிறைய நடன கலைஞர்கள் சரக்கு கிளாஸ் உடன் கும்மாளம் அடிப்பதையும், நெருப்பு போன்ற உருவில் சிங்கம் தோற்றம் இருப்பதையும் போஸ்டரில் காண முடிகிறது. அனேகமாக இந்தபாடல் லியோ படத்தின் துவக்க பாடலாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இதை விஜய்யே பாடியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்தபடம் வருகிற அக்., 19ம் தேதி வெளியாக உள்ளது.