தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பிரபல எடிட்டர் மோகனின் மகன் ரவி. தெலுங்கு படங்களை வாங்கி அதை டப் செய்து வெளியிட்டு வந்த மோகன், தெலுங்கில் ஹிட்டான 'ஜெயம்' படத்தை வாங்கி அதில் தன் மகன் ரவியை நாயகனாகவும், இன்னொரு மகன் ராஜாவை இயக்குனராகவும் அறிமுகப்படுத்தினார். படம் பெரிய வெற்றி பெறவே இருவரும் அவரவர் துறையில் வேகமாக முன்னேறினார்கள்.
தற்போது ஜெயம் ரவி சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. இதுகுறித்து ஜெயம் ரவி வெளியிட்டுள்ள பதிவில் “திரையுலக வாழ்க்கையில் முக்கியமான இந்த மைல் கல்லை அடைந்து இருப்பதை அளவில்லாத நன்றி உணர்வுகளோடு கொண்டாடுகிறேன். என்மீது அன்பு வைத்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'ஜெயம்' படத்தில் இருந்து 'பொன்னியின் செல்வன்' படம் வரை என்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புகள் அளித்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்களுக்கும் எனது 20 ஆண்டுகால பயணத்தில் அங்கமாக இருந்த அனைவருக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.
25 படங்களுக்கு மேல் நடித்துள்ள ஜெயம்ரவி கடைசியாக பொன்னியின் செல்வனில் அருண்மொழி வர்மனாக நடித்திருந்தார். தற்போது சைரன், இறைவன், மற்றும் பெயரிடப்படாத தனது 30வது படத்தில் நடித்து வருகிறார்.