தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் சினிமாவில் மீண்டும் 'ரீ-ரிலீஸ்' என்பது வெற்றிகரமாக ஆரம்பமாகியுள்ளது என்றே சொல்ல வேண்டும். முன்பெல்லாம் பழைய படங்களை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்தால் அதைப் பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமும் வரும், தனி வசூலும் கிடைக்கும். சாட்டிலைட் டிவிக்கள் வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது, சினிமா டிஜிட்டலுக்கு மாறிய பிறகு முற்றிலுமாகக் குறைந்தே போனது. ஆனால், இன்றைய ஓடிடி காலத்தில் ரீ-ரிலீஸ் படங்களுக்குத் தற்போது வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா நடித்து 2006ல் வெளிவந்த 'வேட்டையாடு விளையாடு' படம் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக 7.1 ஆடியோ, 4 கே டிஜிட்டல் வடிவில் நேற்று தியேட்டர்களில் வெளியானது. நேற்று வெளியான மற்ற படங்களைக் காட்டிலும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். சில புதிய படங்களை விடவும் இந்தப் படம் அதிக தியேட்டர்களில், காட்சிகளில் வெளியாகி உள்ளது. குறிப்பாக மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இன்றும் நாளையும் கூட குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
இது போன்று ரசிகர்களைக் கவர்ந்த படங்கள் வரும் மாதங்களில் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் வாய்ப்பை இந்தப் படம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.