தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம், 'மாமன்னன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வருகிற 29ம் தேதி படம் வெளிவருகிறது. இதுதான் என் கடைசி படம் என்று அறிவித்த உதயநிதி, இதுதான் எனது கடைசி சினிமா பேட்டி என்று அறிவித்து நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைப் பார்த்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க விரும்பினேன். அது நிறைவேறி விட்டது. மிஷ்கின், மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க விரும்பினேன். அதுவும் நிறைவேறியது.
'நெஞ்சுக்கு நீதி' படத்தில் நடிக்கும்போது, 'மாமன்னன்' எனது கடைசி படம் என்பதில் உறுதியாக இருந்தேன். இப்போதும் உறுதியாக இருக்கிறேன். முதலில் நான் சினிமாவுக்கு வரமாட்டேன் என்றேன். பிறகு வந்தேன். அடுத்து, நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றேன். ஆனால், அரசியலுக்கு வந்து அமைச்சராகவும் ஆகிவிட்டேன். இப்போது என் முன்பு மக்களுக்கான பணிகள் நிறைய காத்திருக்கிறது. அவற்றை எல்லாம் செய்து முடிக்க வேண்டும்.
கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நான் நடிப்பதாகவும் வெற்றிமாறன் திரைக்கதை எழுதுவதாகவும் இருந்தது. நான் அமைச்சரானவுடனே கமலிடம் இப்படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று சொன்னேன். 'அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். திரைப்பணியை விட, மக்கள் பணி மகத்தானது. இந்தக்கதை உங்களுக்காக காத்திருக்கும்” என்று சொல்லி என்னை வாழ்த்தினார்.
'மாமன்னன்' படத்தில் வடிவேலுதான் மாமன்னன், நான் சாதாரண மன்னன். இந்த படம் மாரி செல்வராஜின் அரசியலை பேசுகிறது. நான் நடித்த படங்களிலேயே முக்கியமான படமாக எனக்கு பிடித்த படமாக மாமன்னன் இருக்கும். என்றார்.