தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

செல்வராகவன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால், மற்றும் பலர் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் '7 ஜி ரெயின்போ காலனி'. இப்படம் தெலுங்கில் '7 ஜி பிருந்தாவன் காலனி' என்ற பெயரில் வெளியாகி அங்கும் வெற்றி பெற்றது. அது மட்டுமல்ல ஹிந்தி, கன்னடம், பெங்காலி, ஒடியா ஆகிய மொழிகளிலும் இப்படம் ரீமேக் ஆனது.
யுவனின் இசையில், நா முத்துக்குமார் எழுதிய அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்து அந்தப் படம் பெரும் வெற்றி பெற காரணமாக அமைந்தது. யுவனின் இசையில் வெளிவந்த படங்களில் அப்படம் அவருக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
19 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கத் தற்போது திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் தயாரிக்க, ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, யுவன் இசையமைக்க உருவாக உள்ளது என்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்த சோனியா அகர்வாலைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்தும் விட்டார் செல்வராகவன். அதனால் இரண்டாம் பாகத்தில் வேறு ஒருவர் கதாநாயகியாக நடிப்பார் எனத் தெரிகிறது.
முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தையும் தமிழ், தெலுங்கில் தயாரிக்க உள்ளார்களாம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.