தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

நடிகர் ஹரிஷ் கல்யாண் தோனி தயாரிக்கும் ‛எல்ஜிஎம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தப்டியாக புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பார்க்கிங் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். நடிகை இந்துஜா நாயகியாக நடிக்கிறார். ஹோல்டர்ஸ் பிலிம் பேக்டரி மற்றும் பெசன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். நேற்று ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு பார்க்கிங் படக்குழுவினர்கள் சார்பில் அடுத்தடுத்து குறிப்பிட்ட நேர இடைவெளியில் படத்தின் மூன்று போஸ்டர்களை வெளியிட்டனர். ஒவ்வொரு போஸ்டர்களிலும் ஹரிஷ் வெவ்வேறு எமொஷனலில் வெளிப்படுத்தியுள்ளார். இப்போது இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.