கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பிஸியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாது வில்லனாகவும் அசத்தி வருகிறார். தற்போது குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் தனது 50வது படத்தில் நடித்து வருகிறார்.
அனுராக் காஷ்யப், நட்டி (நட்ராஜ்), மம்தா மோகன்தாஸ், அபிராமி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன், சரவணன் சுப்பையா, எஸ்.எஸ்.ஸ்டான்லி, கல்கி, காளையன் மற்றும் இன்னும் பலர் நடிக்கிறார்கள். காந்தாரா பட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசை அமைக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதுநாள் வரை படத்திற்கு டைட்டில் வைக்காமலே படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இப்போது மகாராஜா என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழுவினர் டைட்டில் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.