துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மலையாளத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியாகி வசூலையும் வெற்றியையும் பெற்ற படம் திரிஷ்யம். இதை இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். அதற்கு முன்னதாக அவர் சில வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும் திரிஷ்யம் படம் மூலம் முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்தார்.அதைத்தொடர்ந்து திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் வெளியிட்டு முதல் பாகத்தைப் போலவே அடுத்த வெற்றியை பெற்றது இந்த கூட்டணி.
தொடர்ந்து மூன்றாவதாக ராம் என்கிற படத்திற்காக இணைந்தனர் மோகன்லாலும் ஜீத்து ஜோசப்பும். ஆனால் அந்த சமயத்தில் கொரோனா அலை பரவ ஆரம்பித்ததால் இடையில் நிறுத்தப்பட்ட அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை பாதியிலேயே அப்படியே நிற்கிறது. ஆனால் அதன் பிறகு டுவல்த் மேன் என்கிற இன்னொரு வெற்றி படத்தையும் இந்த கூட்டணி கொடுத்தனர்.
இதை தொடர்ந்து மீண்டும் ஐந்தாவது முறையாக மோகன்லாலும், ஜீத்து ஜோசப்பும் புதிய படத்தில் இணைகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. ஏற்கனவே திரிஷ்யம் படத்திற்கு மூன்றாம் பாகம் இருக்கிறது என்றும் மூன்றாம் பாகத்துடன் அந்த கதை முற்றுப்பெறும் என்றும் ஜீத்து ஜோசப் கூறியிருந்தார். ஆனால் இப்போது இவர்கள் இணையும் படம் திரிஷ்யம் 3 அல்ல என்றும் வேறு ஒரு புதிய கதைக்காக என்றும் தெரியவந்துள்ளது.