சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‛ஜெயிலர்' மற்றும் லால் சலாம் படங்களில் நடித்து முடித்துள்ளார். படம் முடித்த கையோடு சில தினங்களுக்கு முன்பு மாலத்தீவுக்கு சென்றார். அவர் அங்கு சென்ற தகவலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் புகைப்படத்துடன் வெளியிட்டது. இந்த நிலையில் மாலத்தீவில் உள்ள கடற்கரையில் நடிகர் ரஜினி வாக்கிங் செல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அரைக்கால் சட்டை, பனியன் அணிந்து கொண்டு காலில் செருப்பு கூட அணியாமல் ரஜினிகாந்த் மாலத்தீவு கடற்கரையில் தனியாக வாக்கிங் செல்கிறார். ரஜினியின் இந்த மிக எளிமையான தோற்றத்தை பார்த்த ரசிகர்கள், தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரும் நிலையில், அதன்பிறகு ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் அவர் நடித்துள்ள லால் சலாம் படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வருகிறது.