'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டுவிழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

சண்டை இயக்குனராக பணியாற்றி வந்த ஜாலி பாஸ்டியன் 'லாக்டவுன் டைரி' என்ற படத்தின் மூலம் இயக்குனராகி இருகிறார். இந்த படத்தை அங்கிதா புரொடக்ஷன் சார்பில் எஸ்.முரளி தயாரிக்கிறார். ஜாலி பாஸ்டியன் மகன் விஹான் ஜாலி (அமீத்) கதாநாயகனாக அறிமுகமாகிறார். சஹானா கதாநாயகியாக நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் படம் பற்றி ஜாலி பாஸ்டியன் கூறியதாவது: 900 படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்து எல்லா ஹீரோக்களுடன் பணியாற்றி இருக்கிறேன். கன்னடத்தில் ஒரு படம் இயக்கி இருக்கிறேன். 2வது படமாக 'லாக் டவுன் டைரி' படத்தை தமிழில் இயக்கி உள்ளேன். கொரோனா காலகட்ட லாக் டவுன் நேரத்தில் மக்கள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை, மருந்து வாங்க கடைக்கு சென்ற இளைஞர்கள் போலீசிடம் அடி வாங்கினார்கள். இப்படி பல்வேறு சம்பவங்கள் நடந்தன. அதையெல்லாம் ஆராய்ச்சி செய்து தொகுத்திருப்பதுடன் இளம் காதல் ஜோடி ஒன்று இந்த இக்கட்டான நேரத்தில் சிக்கி எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து லாக் டவுன் டைரி படம் உருவாகியிருக்கிறது. இது லாக் டவுன் கால கதை மட்டுமல்ல குடும்பங்களின் கதையும் உள்ளடக்கியது. என்கிறார் ஜாலி பாஸ்டின்.