நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி படம் கல்கி 2898 ஏ.டி. பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வைஜயந்தி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
ஏற்கனவே இந்த படம் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். அறிமுக வீடியோவிலும் 2024 ரிலீஸ் என குறிப்பிட்டனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை 70% சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளதால் ஜனவரியில் படத்தை வெளியிடுவது சிரமம் என்கிறார்கள். இதனால் இப்படத்தின் வெளியீட்டை 2024, மே மாதம் 9ம் தேதிக்கு தள்ளி வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.