தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழில் இன்றைய இளம் இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் அனிருத். அவரது பல பாடல்கள் யு-டியுப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன. தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி டாப் நடிகர்களுடன் பணி புரிந்துள்ளவர் அனிருத்.
ஹிந்தியில் ஷாரூக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தின் மூலம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஏற்கெனவே அப்படத்தின் அறிமுக வீடியோ, பிரிவியூ, டிரைலர் ஆகியவற்றில் அவரது இசை பேசப்பட்டது. நேற்று முதல் சிங்கிளான “ஜந்தா பந்தா” என்ற பாடல் வெளியானது. இப்பாடல் வெளியான 21 மணி நேரங்களில் 29 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதன் தமிழ்ப் பாடலான 'வந்த இடம்' 5 மில்லியன் பார்வைகளையும், தெலுங்குப் பாடலான 'தும்மே துலிபேலா' 4 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.
மூன்று மொழிகளிலும் 24 மணிநேரத்தில் இந்த பாடலுக்கு 46 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்தன.
ஹிந்தியில் இதற்கு முன்பு 'ஜெர்ஸி' படத்திற்கு பின்னணி இசையை மட்டும் அமைத்திருந்தார் அனிருத். பாடல்கள், பின்னணி இசை என முழுமையாக அவர் இசையமைக்கும் முதல் படமான 'ஜவான்' படம் மூலம் ஹிந்தியிலும் அழுத்தமாய் தடம் பதித்துள்ளார்.