தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு மற்றும் பலர் நடித்த 'மாமன்னன்' படம் ஜுன் மாதம் 29ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. சாதி கலந்த அரசியல் படமாக வெளிவந்த அப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்தன. இருப்பினும் வசூல் ரீதியாக 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது என்று அறிவித்தார்கள்.
'மாமன்னன்' படம் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டர்களில் படத்தைப் பார்க்காத பலரும் ஓடிடி தளத்தில் பார்த்து வருகிறார்கள். இயக்குனர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோரை விடவும் அப்படத்தில் வில்லனாக அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்த மலையாள நடிகரான பகத் பாசில் நடிப்பை ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.
ஓடிடி தளத்தில் படம் வெளியான நாளிலிருந்தே அவர் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கிலும் இருக்கிறார். படத்தில் அவரது சிறந்த நடிப்பை காட்சிக்குக் காட்சியாக விமர்சித்து வருகிறார்கள். மேலும், பகத் பாசிலை மையமாக வைத்து பல மீம்ஸ்களும் தற்போது அதிகமாக வெளியாகி வருகின்றன. தனது நடிப்புக்குக் கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து பகத் பாசில், அவரது பேஸ்புக் பக்கத்தின் கவர் போட்டோவில் 'மாமன்னன்' பட ஸ்டில்களை இணைத்துள்ளார்.