தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ்த் திரையுலகம் மட்டுமல்ல இந்தியத் திரையுலகம் கொண்டாடும் ஒரு நடிகர் கமல்ஹாசன். 1960ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி வெளிவந்த 'களத்தூர் கண்ணம்மா' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கடந்த 63 வருடங்களாக திரையுலகத்தில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார்.
திரையுலகில் அவருடைய சாதனைகளைக் கொண்டாடும் விதமாக 'கமல்ஹாசன் 64' என அவரது ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் அவருக்கு இன்று வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் கமல்ஹாசன் பற்றி பல தகவல்கள் இன்று வெளியாகி வருகின்றன.
அனைத்து வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, “64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள்ள நாட்கள் என் மக்களுக்காக. உங்கள் நான்,” என சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.