ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? | வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 எனது கனவுத் திட்டம் : இயக்குனர் பொன்ராம் பேட்டி | பிரதமர் மோடியின் வாழ்க்கை படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | டைட்டிலை வைத்து விட்டதால் வேறு வழியின்றி பவன் கல்யாணின் பெயரை மாற்றினேன் : ஓஜி இயக்குனர் சுஜித் | டார்க் மேக்கப்பில் நடித்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராதாரவி | பிளாஷ்பேக் : இப்படியும் நடந்திருக்கு | திட்டமிட்டபடி படத்தை முடித்தோம் : விஜய் மகன் ஜேசன் | மகன் படப்பிடிப்பை பார்க்க வந்த தந்தை மம்முட்டி | தமிழ் சினிமாவில் வெற்றி குறைய நடிகர்களின் தலையீடு தான் காரணம் : திருப்பூர் சுப்ரமணியம் |

தனது ஒவ்வொரு படம் வெளியானதும் இமயமலைக்கு ஆன்மிக பயணம் செல்வதை வழக்கமாக கொண்டவர் ரஜினி. கொரோனா தொற்று காரணமாக 4 ஆண்டுகளாக செல்லவில்லை. அவர் கடைசியாக நடித்த 'ஜெயிலர்' படம் கடந்த 10ம் தேதி வெளியான நிலையில் இந்த முறை இமயமலைக்கு சென்றார்.
கடந்த 9ம் தேதி பெங்களூரு சென்று, அங்கிருந்து டேராடூன் வழியாக இமயமலை சென்றார். பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகை உள்பட பல இடங்களுக்கு சென்று வழிபட்டார். பல ஆன்மிக குருக்களையும், அரசியல் தலைவர்களையும் சந்தித்தார். தனது 12 நாள் ஆன்மிக பயணத்தை முடித்து கொண்டு நேற்று இரவு ரஜினி சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் ரஜினியை அவரது ரசிகர்கள் மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ‛‛4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலைக்கு சென்று வந்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. 'ஜெயிலர்' படத்தை மிகப்பெரிய வெற்றி அடைய வைத்த என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கும், உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பட தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர் உள்ளிட்ட அனைத்து படகுழுவினருக்கும் நன்றியையும் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்,'' என்றார்.
உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது சர்ச்சை ஆகி இருப்பது குறித்து கேட்டபோது, “நட்பு ரீதியான சந்திப்பே தவிர வேறு ஒன்றும் அதில் கிடையாது. சன்னியாசி ஆகட்டும், யோகிகள் ஆகட்டும் அவர்கள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். அதைத்தான் நான் செய்தேன். பயணத்தின் போது அரசியல் தலைவர்களை நட்பு ரீதியாக சந்தித்தேன். அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை," என்றார்.