தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்னதி, ஸ்ரீ மற்றும் சானியா உள்ளிட்ட நடிகர்கள் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் இறுகப்பற்று. எலி, தெனாலிராமன் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்கு ஒரு புதுமையான பாணியில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக இதுபோன்ற வீடியோக்களில் அந்தத் திரைப்படங்களின் காட்சிகளே இடம் பெறும். ஆனால் இறுகப்பற்று வீடியோவில் உண்மையான திருமணமான ஜோடிகளின் வெளிப்படையான உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் அன்பு, அன்யோன்னியம், புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றில் இருக்கும் சிக்கல்கள் என்ன என்பது புலனாகி அது இறுகப்பற்று படத்தின் கருவைப் பிரதிபலிக்கும் வண்ணம் இந்த வீடியோ பயன்படுத்தப்பட்டுள்ளது.
திருமண உறவில் இருப்பது தொடர்பான பொதுவான அனுபவங்களை எடுத்துரைப்பதன் மூலம் பார்வையாளர்களை ஆழமான மட்டத்தில் கவர்ந்திழுக்கும் நோக்கத்தோடு இந்த வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுபற்றி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில், "திரைப்பட ரசிகர்களை ஈர்க்கும் புதுமையான யோசனைகளை நாங்கள் தொடர்ந்து திரைக்குக் கொண்டு வருகிறோம். தற்போது இறுகப்பற்று திரைப்படத்தின் உலகை, அந்த உணர்வை பார்வையாளர்களுக்குத் தருவதில் மகிழ்ச்சியடைகிறோம், இது பார்வையாளர்களை அவர்களின் சொந்த உணர்வுகளையும் அனுபவங்களையும் யோசித்து, உணர வேண்டும் என்ற எண்ணத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது," என்றார்.
வீடியோ லிங்க்.... : https://youtu.be/FBdtwYDAjlw