தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் 7வது சீசன் அக்டோபர் 1 முதல் ஆரம்பமாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் அறிவிப்பிலிருந்தே இந்த சீசனில் பிக் பாஸ் வீடு, இரண்டாக மாறப் போகிறது என்று கூறி வந்தார்கள்.
கடந்த 6 சீசன்களாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ஒரே வீட்டில்தான் இருப்பார்கள். கடந்த 6 சீசன்களாக நிகழ்ச்சியின் கான்செப்ட்டில் பெரிய மாற்றங்கள் எல்லாம் இருந்ததில்லை. இந்த 7வது சீசனில்தான் முதலில் இரண்டு வீடு என்ற மாற்றத்தை அறிவித்துள்ளார்கள்.
வீடு மட்டும் இரண்டு என்பது மாற்றமல்ல, நிகழ்ச்சியிலும் இன்னும் சில மாற்றங்கள் இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு காதல் நாடகம், யாராவது இருவருக்கிடையில் அதிக மோதல், குரூப்பிசம், கவர்ச்சி காட்டும் ஒரு பெண் போட்டியாளர் என அரைத்த மாவையே அரைத்து வந்தார்கள். ஒவ்வொரு சீசனின் போதும் இது 'ஸ்கிரிப்ட்' என குற்றச்சாட்டு வருவதும் உண்டு.
அவ்வளவு விமர்சனங்களுக்கு மத்தியில் எந்த மாதிரியான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். வேறு என்னென்ன மாற்றங்கள் இருக்கப் போகிறது என்பது நிகழ்ச்சி ஆரம்பமாகும் போதுதான் தெரிய வரும்.