சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா நடித்த 'குட்பை' என்கிற பாலிவுட் படம் முதலில் வெளியானது. இந்த ஆண்டின் துவக்கத்தில் 'மிஷன் மஞ்சு' வெளியானது. இரு படமும் ராஷ்மிகாவிற்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் அவர் நடித்துள்ள 'அனிமல்' படம் டிசம்பர் மாதம் முதல் தேதியில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு இந்த படம் ஹிந்தி தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கிறார். பாபி தியோல், திரிப்தி டிம்ரி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி உள்ளார்.
படத்தை பூஷன் குமார், கிரிஷன் குமாரின் டீ சீரிஸ் நிறுவனம், முராத் கெடானியின் சினி 1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்துதான் ராஷ்மிகா பாலிவுட்டில் நீடிப்பாரா? அல்லது டோலிவுட்டுக்கே திரும்புவாரா என்பது தெரியவரும்.