தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் சினிமாவில் இளம் முன்னணி நடிகைகள் பட்டியலில் பிரியா பவானி சங்கர் தனக்கென ஒரு இடம் பிடித்து விட்டார். சீரான இடைவெளிகளில் அவரது படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அடுத்ததாக கைவசம் ஆறு படங்களை தன்னிடம் வைத்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். இந்த நிலையில் சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பிரியா பவானி சங்கர்.
இந்த நிகழ்ச்சியில் அவர் வெறுமனே இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு நடிகையாக மட்டும் கலந்து கொள்ளாமல் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளான ஒரு தாயின் மகளாகவும் தனது உணர்வுகளையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வதற்காகவே வந்திருந்தார் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிந்தது.
இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, கடந்த வருடம் தனது தாய்க்கு கேன்சருக்கான அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஆரம்ப நிலையில் இருப்பதால் முற்றிலும் குணப்படுத்தி விட முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள். தொடர்ந்து தனது தாய்க்கு அவர் எந்த அளவு மன உறுதி தரும் விதமாக நடந்து கொள்ள வேண்டிய இருந்தது என்பதையும் மருத்துவர்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தையும் முறையாக கடைபிடித்ததையும் கூறியவர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் முழுதாக மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் நம்ப வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். தனது தாய் புற்றுநோய் தாக்கம் காரணமாக அவதிப்பட்டார் என்பதை கூறும் போது தன்னை அறியாமல் மேடையிலேயே கண்கலங்கினார் பிரியா பவானி சங்கர்.