முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
இந்தியன்- 2 படத்தை அடுத்து பிரபாசுடன் கல்கி படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அதையடுத்து எச்.வினோத் இயக்கும் தனது 233 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை முடித்ததும் மணிரத்னம் இயக்கும் தனது 234வது படத்தில் நடிக்கப் போகிறார். சமீபத்தில் இந்த 234 வது படத்தின் பூஜை புகைப்படம் மற்றும் டெக்னீசியன் குறித்த தகவல்கள் வெளியாகின. அதோடு நவம்பர் ஏழாம் தேதியான கமலின் பிறந்தநாள் அன்று இப்படத்தின் அறிமுக டீசர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல் 234 வது படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது இந்த படத்தின் அறிமுக டீசர் குறித்து ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார். அதில், மணிரத்னம் - கமல் கூட்டணியில் இணைவது பெருமையாக உள்ளது. இந்த படத்தின் டீசர் கமல் பிறந்தநாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கமல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஒருநாளைக்கு முன்னதாக நவம்பர் ஆறாம் தேதியே டீசர் வெளியாகிறது என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் இந்தியன் 2 படத்தின் அப்டேட் நவம்பர் மூன்றாம் தேதி வெளியாகவுள்ளது. அந்த அப்டேட்டில் கமல்ஹாசனின் பர்ஸ்ட் லுக் மற்றும் ப்ரமோ வீடியோ வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு பக்கம் இந்தியன் -2 அப்டேட் , இன்னொரு பக்கம் கமல் 234வது படத்தின் அப்டேட் என செய்திகள் வெளியாகி இருப்பது கமல் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.