நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
கேரளாவில் வருடந்தோறும் ‛கேரளியம்' நாள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளா பிறந்த தினமான நவ-1ம் தேதியைத் தான் இந்த பெயரில் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் கேரளாவின் 67வது கேரளியம் நாள் நேற்று திருவனந்தபுரத்தில் கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசே செய்திருந்தது.
இந்த நிகழ்வில் மலையாள முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டியுடன் சிறப்பு விருந்தினராக தமிழகத்தில் இருந்து சென்று நடிகர் கமல்ஹாசனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனும் பங்கேற்றார். தென்னிந்திய முன்னணி நட்சத்திரங்கள் ஒரே நிகழ்வில் இணைந்து பங்கேற்றது ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தி உள்ளது.