ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை | 28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ சாந்தி | ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் கேரக்டரில் முதலில் நடித்தவர்கள் : கேப்டன் பிரபாகரன் குறித்து ஆர்.கே.செல்வமணி | கூலி : பெங்களூருவில் அதிகபட்ச கட்டணம் ரூ.2000 | 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மெஹ்ரின் பிரதிஸ்டா | பிளாஷ்பேக்: மங்கம்மாவின் வெற்றியும், தோல்வியும் |
நடிகை அமலாபால், இயக்குனர் விஜய்யைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இரண்டு வருடங்களிலேயே இருவரும் விவகாரத்து செய்துவிட்டனர். அமலா பாலுக்கும் பாடகர் பவிந்தர் சிங் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றதாகச் செய்திகள் வெளியாகின. பவிந்தர் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து பின்னர் அதை 'டெலிட்' செய்துவிட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை அமலா பால் பிறந்த நாளில் அவரது காதலர் ஜெகத் தேசாய் புரபோஸ் செய்த வீடியோவை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியிருந்த நிலையில், அமலாபால் இந்த காதலை ஏற்றுக்கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஜெகத் தேசாயை அமலாபால் திருமணம் செய்துகொண்டுள்ளார். இது சம்பந்தமான புகைப்படத்தை வெளியிட்ட ஜெகத் தேசாய், ‛இரண்டு ஆன்மாக்கள், ஒரு விதி, என் தெய்வீகப் பெண்ணுடன் கைகோர்த்து நடப்பது, இந்த வாழ்நாள் முழுவதும்' எனப் பதிவிட்டுள்ளார்.