தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்தாண்டு தெலுங்கில் வெளியான சீதா ராமம் என்ற படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் ஹிந்தி நடிகை மிருணாள் தாக்கூர். அதன் பிறகு பேமிலி ஸ்டார், ஹாய் நன்னா போன்ற தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில், சீதாராமம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றார் மிருணாள் தாக்கூர். அப்போது அவருக்கு அந்த விருதினை வழங்கிய தெலுங்கு நடிகர் அல்லு அரவிந்த், மிருணாள் தாக்கூர் கூடிய சீக்கிரமே தெலுங்கு மணமகனை திருமணம் செய்து கொண்டு, ஹைதராபாத்தில் செட்டிலாக வேண்டும் என்று மேடையில் பேசினார்.
அதையடுத்து, டோலிவுட்டில் மிருணாள் தாக்கூர் யாரோ தெலுங்கு நடிகரை காதலிக்கிறார். அதனால் தான் அல்லு அரவிந்த் அப்படி ஒரு செய்தியை வெளியிட்டார் என்று பல நடிகர்களுடன் அவரை இணைத்து பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் அது குறித்து மிருணாள் தாக்கூர் ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறார். அதில், நான் எந்த தெலுங்கு நடிகரையும் காதலிக்கவும் இல்லை, திருமணம் செய்து கொள்ளவும் இல்லை. அந்த விருது விழாவில் அல்லு அரவிந்த் விளையாட்டாக தான் அப்படி பேசினார். அதனால் இதை வைத்து ஆளாளுக்கு தெலுங்கு நடிகர்களுடன் என்னை இணைத்து செய்திகள் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் மிருணாள் தாக்கூர்.