அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
கமல்ஹாசனுக்கு நாளை(நவ.,07) 69வது பிறந்த நாள். பிறந்த நாள் நிகழ்ச்சிகள் இன்று முதலே தொடங்குகிறது. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கமலுக்கு பிறந்து நாள் வாழ்த்து தெரிவித்து சிவகுமார் வெளியிட்டுள்ள வாழத்து செய்தியில் கூறியிருப்பதாவது:
நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ்ச் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும்தான். அவர்கள் செய்த 'வெரைட்டி ரோல்களை' இதுவரை வேறுயாரும் செய்ய முடியவில்லை. சிவாஜி நடித்த சரித்திர, சமூக, புராண வேடங்களை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அவர் செய்து விட்டார். கமல், நீங்கள் நடிப்பதோடு நில்லாமல், தேர்ந்த பரதக்கலைஞர், நடனக் கலையில் வல்லவர், பாடகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர்.
'டூப்' போடாமல் அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் நீங்கள் சிங்கத்தோடு மோதியவர். 'மீண்டும் ஒரு சூர்யோதயம்' -படத்தில் ரன்வே ரோட்டில் பாய்ந்து ஓடிய குதிரை சறுக்கி கீழே விழ 20அடி தூரம் குதிரையின் அடியில் உங்கள் கால் மாட்டி எலும்பு நொறுங்க நடித்தவர் நீங்கள்.1973ல் அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் என்று துவங்கி தங்கத்திலே வைரம், மேல்நாட்டு மருமகள் என 8 படங்களில் நாம் இருவரும் சேர்ந்து நடித்தோம். நான் கதாநாயகன், நீங்கள் பெரும்பாலும் வில்லனாக நடித்தீர்கள். வில்லன் வேடங்களில் நடித்து பெரிய ஹீரோவாக எங்கள் தலைமுறையில் உயர்ந்த முதல் நடிகர் நீங்கள்தான்.
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல உங்களுக்குள் இருந்த 'பொறி'யை கண்டவன் நான். அந்தச் செடி வளர்ந்து இன்று விருட்சமாகி 'நாயகன்', 'குணா', 'அன்பே சிவம்', 'அவ்வை சண்முகி', 'ஹேராம் ' என்று நடிப்பின் இமயத்தைத் தொட்டுள்ளது. நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாகத் தெரியவில்லை.
அரசியல் களம் உங்களுக்காக காத்திருக்கிறது. அமெரிக்கா கொண்டாடிய ஆப்ரஹாம் லிங்கனே இரண்டு முறை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த பின்னரே அதிபரானார். அரசியலிலும், திரையில் சாதித்தத்தை, நீங்கள் சாதிக்க முடியும்.. துணிந்து இறங்குங்கள். நூறாண்டு நீவிர் வாழ்க. இவ்வாறு தனது வாழ்த்து செய்தியில் சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.