திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ரஜினிக்கு சமீபகாலமாக கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பல நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் ரஜினியை சந்தித்து வருகிறார்கள். சமீபத்தில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தார். தொடர் வெற்றிகளை குவித்து வரும் இந்தியா இன்று அரையிறுதி போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகிறது. இது இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும். இதில் தோற்றால் இதுவரை பெற்ற வெற்றிகள் பயனில்லாமல் போகும்.
இதனால் இந்த போட்டியை இந்திய ரசிகர்கள் பரபரப்புடன் எதிர்பார்க்கிறார்கள். இந்த நிலையில் இந்த போட்டியை காண நேற்று இரவு ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் மும்பை புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவரது பயணம் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு “கிரிக்கெட் விளையாட்டை பார்க்க போகிறேன்” என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்றார்.
நள்ளிரவில் மும்பை விமான நிலையத்தில் இறங்கிய ரஜினி அங்கிருந்து தான் தங்கும் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். இன்று மதியம் 2 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியை ரஜினி பார்க்கிறார். போட்டி முடிந்ததும் இன்று மாலையே அவர் சென்னை திரும்ப திட்டமிட்டிருக்கிறார்.