துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கல்யாண் இயக்கத்தில், சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் '80ஸ் பில்டப்'. இப்படம் அடுத்த வாரம் நவம்பர் 24ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா படத்திற்காக சந்தானத்திற்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தேன் என்பதை வெளிப்படையாக அறிவித்தார். அது மட்டுமல்ல அவரது தயாரிப்பில் முதன் முதலில் நடித்ததிலிருந்து இப்போது வரை கொடுத்த சம்பளங்களையும் பட்டியலிட்டார்.
“சில்லுனு ஒரு காதல்' படத்துல சந்தானம் சாருக்கு ஒண்ணே முக்கால் லட்சம் சம்பளம் கொடுத்திருக்கேன். அப்புறம் 18 லட்சம் கொடுத்திருக்கேன், 56 லட்சம் கொடுத்திருக்கேன், 1 கோடியே 25 லட்ச கொடுத்திருக்கேன். இப்ப 3 கோடி கொடுத்திருக்கேன். இன்னும் நான் 30 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கிற அளவுக்கு சந்தானம் பிரதருக்கு வளர்ச்சி வரணும். அதையும் தாண்டி அவருடைய பயணத்துல நானும் போகணும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்,” என்றார்.