தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரபல பின்னணி பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீதான 'மீ டு' குற்றச்சாட்டை சுமத்திய பின்னர் தமிழ் திரையுலகத்தில் இருந்து மறைமுகமாக தடை விதிக்கப்பட்டு, வாய்ப்புகள் கொடுக்கப்படாமல் ஒதுக்கப்பட்டு வந்தார். இதனால் தெலுங்கில் மட்டும் அவர் பாடல்களை பாடியும் டப்பிங் பேசியும் வந்தார். சின்மயிக்கு நெருங்கிய நட்பில் இருந்தவர்கள் மட்டும் தமிழில் அவரை அழைத்து முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேச வைத்து வந்தனர்.
இந்த நிலையில் நடிகர் வைபவ் கதாநாயகனாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்திற்காக டி.இமான் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார் சின்மயி. இந்த படத்தை விக்ரம் ராஜேஸ்வர் மற்றும் அருண் கேசவ் என்கிற இரட்டை இயக்குநர்கள் தங்கள் முதல் படமாக இயக்கி வருகின்றனர்.
இது குறித்து இசை அமைப்பாளர் டி.இமான் வெளியிட்டுள்ள பதிவில், “பன்முக திறமை கொண்ட சின்மயியை வைபவ், அதுல்யா ரவி நடித்துள்ள படத்திற்காக பாட வைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.