'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

'நடிகையர் திலகம்' படத்தை இயக்கிய நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார் கமல்ஹாசன். இதற்காக ஐதராபாத்தில் பிரம்மாண்ட அரங்கம் ஒன்றை அமைத்துள்ளார்கள். அதில்தான் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம்.
சில மாதங்களுக்கு முன்புதான் இப்படத்தில் கமல்ஹாசன் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால், அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு தற்போதுதான் ஆரம்பமாகியுள்ளது.
இரண்டு பாகங்களாக வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகத்தில் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சில நிமிடங்கள் மட்டுமே இடம் பெறும் என்கிறார்கள்.