பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் |
கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரித்து வர்மா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படம் கடந்த வாரம் வெளியாகும் என்று அறிக்கப்பட்டிருந்த நிலையில் படம் வெளியாகவில்லை. நாளை டிசம்பர் 1ம் தேதியாவது வெளியாகும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், அதற்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.
விரைவில் படத்தை வெளியிட முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என கவுதம் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். அந்த 'விரைவில்' என்பதற்கான காலக்கெடு என்று எதையும் சொல்லாமல் தவிர்த்துவிட்டார். அது அடுத்த வாரமாவது இருக்கலாம், அல்லது அதற்குப் பிறகாவது இருக்கலாம்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 'எமகாதகன்' பட விழாவில் பேசிய தயாரிப்பாளரும், வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவருமான கே ராஜன், 'துருவ நட்சத்திரம்' படம் பற்றிப் பேசினார். அப்படத்திற்காக 60 கோடி ரூபாய்க்கு திரைப்பட கூட்டமைப்பில் புகார் உள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்காக 25 கோடி வரை கடன் கொடுத்து படம் வெளியாகக் காரணமாக இருந்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். ஆனால், அந்தப் பணத்தை கவுதம் இன்னமும் திருப்பித் தரவில்லை என்றும் கூறினார்.
60 கோடி ரூபாய் பஞ்சாயத்து முடிந்தால்தான் படம் திரைக்கு வருமா அல்லது நீதிமன்ற வழக்கு முடிந்தால் படம் திரைக்கு வருமா என்பது போகப் போகத்தான் தெரியும்.