தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பா ரஞ்சித் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'தங்கலான்'. இப்படம் ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போதைய தகவலின்படி படம் மேலும் சில மாதங்கள் தள்ளிப் போகலாம் எனத் தெரிகிறது. படத்தின் இறுதிக் கட்டப் பணிகளை முடிக்க இன்னும் கொஞ்சம் தாமதம் ஆகலாம் என்பதும் ஒரு காரணம். பிரீயட் பிலிம் என்பதால் படத்தைப் பார்த்துப் பார்த்து செதுக்கிக் கொண்டிருக்கிறார்களாம். சமீபத்தில் கூட விக்ரமை வைத்து சில காட்சிகளை மீண்டும் ரீ-ஷுட் செய்தார்களாம்.
அடுத்த வருடம் தமிழ் சினிமாவில் பல முக்கியமான படங்கள் வெளிவர உள்ளன. பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்த 'அயலான்' பட வெளியீட்டிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அடுத்து 'தங்கலான்' தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இனி, படங்கள் முழுமையாகத் தயாரானால் மட்டுமே வெளியீட்டுத் தேதியை அறிவிக்க வேண்டிய சூழலில் தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.