திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். இந்த படம் ஜனவரி 12ம் தேதி திரைக்கு வருகிறது. பீரியட் ஆக்சன் அட்வெஞ்சரஸ் படமாக உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று (ஜன.,3) சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அப்போது இப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள், படம் குறித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள். குறிப்பாக கேப்டன் மில்லர் படம் விஸ்வாசம் படத்தைப் போலவே இருக்கும் என்று தயாரிப்பாளர் கூறினார்.
அதையடுத்து தனுஷ் பேசும்போது, ‛‛சமூக வலைதளம் என்பது மிகப்பெரிய காலத் திருடன். அது உங்களுக்கே தெரியாமல் உங்களின் நேரத்தை திருடிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி நான்கு பேர் ஒன்றாக இருக்கும்போது ஒருவருக்கு ஒருவர் முகம் பார்த்து பேசுவது தான் சிறப்பாக இருக்கும். ஆனால் அதை தவிர்த்து விட்டு மொபைலில் முகம் பார்த்து பேசுவது வேண்டாம்'' என்று கூறினார். அதோடு, ‛‛வளர்ந்து வரும் காலகட்டத்தில் அனைத்துமே சமூக வலைத்தளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளப்படுகிறது. எதையும் அளவாக பயன்படுத்தினால் அனைவருக்கும் நல்லது'' என்றும் தனுஷ் பேசியது கவனம் பெற்றுள்ளது.