தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சலார் படத்திற்கு பின் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட படம் 'கல்கி 2898 ஏடி'. நாக் அஸ்வின் இயக்குகிறார். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இது புராணக் கதைகளால் ஈர்க்கப்பட்ட.. எதிர்காலத்தில் நடைபெறும் அறிவியல் புனைவு படைப்பாகும்.
வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பிரமாண்டமாய் தயாரிக்க, பன்மொழிகளில் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு வளர்ந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். அதன்படி 'கல்கி 2898 ஏடி' படம் வரும் மே மாதம் 9ம் தேதி வெளியாகிறது.
வாரணாசி, மும்பை, டெல்லி, சண்டிகர், சென்னை, மதுரை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், குண்டூர், பீமாவரம், காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல முக்கியத்துவம் வாய்ந்த மாநகரங்களில் 'கல்கி 2898 AD' படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் பிரம்மாண்டமாக வெளியிட்டனர். இதற்காக விஜயவாடாவில் நடைபெற்ற பிரத்யேக அணிவகுப்பு... பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது.
படத்தை தயாரிக்கும் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் சி. அஸ்வினி தத் கூறுகையில், ‛‛நட்சத்திர கலைஞர்களுடன் தயாராகும் 'கல்கி 2898 ஏடி' படத்தின் வெளியீடு(மே 9, 2024) எங்களுக்கு ஒரு சிறப்பான தருணத்தை தருகிறது. எங்கள் நிறுவனத்தின் மைல் கல்லான ஐம்பதாவது ஆண்டுடன் இப்படம் இணைந்துள்ளது. எங்கள் பயணத்தை நாங்கள் தொடரும்போது அதை இந்த திரைப்படம் மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது'' என்றார்.