திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
நடிகர் வடிவேலு ஒரு மிகச் சிறந்த நடிகர் என்ற போதும் தன்னுடன் நடித்த சக நடிகர்களின் இறப்புக்கு கூட செல்லாதவர். இதன் காரணமாகவே தற்போது அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். குறிப்பாக சமீபத்தில் போண்டாமணி, விஜயகாந்த் ஆகியோரின் இறப்புக்கு அவர் செல்லாதது பெரிய அளவில் அவர் மீது அதிருப்தி மனநிலையை உருவாக்கி இருக்கிறது. இத்தனைக்கும் விஜயகாந்த் வீட்டுக்கு அடுத்த தெருவில்தான் வடிவேலுவின் வீடு உள்ளது.
இந்த நிலையில், வடிவேலுவுடன் சில படங்களில் நடித்துள்ள காமெடியன் பெஞ்சமின் கூறுகையில், ‛‛போண்டா மணி, நான் உள்ளிட்ட பல நடிகர்கள் மக்களின் கவனத்திற்கு வந்தது வடிவேலுவால்தான். காரணம் உண்மையிலேயே அவர் ஒரு பிறவிக் கலைஞன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனபோதிலும் அவர் ஒரு நல்ல மனிதர் கிடையாது. குறிப்பாக படப்பிடிப்பு தளங்களில் நாங்கள் எல்லாம் சாப்பாடு கிடைக்காமல் திண்டாடினால் கூட அது குறித்து வடிவேலு ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டார். நாங்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு ரோட்டில் நின்றால் கூட அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவர் ஜாலியாக கேரவனில் அமர்ந்திருப்பார். அதேசமயம், கேப்டன் விஜயகாந்த் போன்ற நடிகர்கள் சக நடிகர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பான்மை கொண்டவர்கள். விஜயகாந்த்தை பொருத்தவரை தனது யூனிட்டில் அனைவரையும் சாப்பிட வைத்து அழகு பார்க்கக் கூடியவர். யார் மனதும் நோகும்படி நடந்து கொள்ள மாட்டார் என்று பெஞ்சமின் கூறி உள்ளார்.