நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
பிக்பாஸ் -7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் பூர்ணிமா, மாயா ஆகிய இருவரும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தார்கள். அதோடு, சக போட்டியாளர்களை கிண்டல், கேலி செய்வது, வெற்றி பெறுவதற்காக எந்த லெவலுக்கும் செல்லக்கூடிய அளவுக்கு இவர்களின் செயல்பாடு இருந்தது. இதனால் பார்வையாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார்கள்.
இப்படியான நிலையில் தற்போது பிக்பாஸ்- 7 போட்டியாளர் பூர்ணிமா ரவிக்கு புதிய திரைப்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் நடிக்கும் படத்தை ஹரி மகாதேவன் என்பவர் இயக்க, கோவை பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், டைட்டில் விரைவில் வெளியாக இருப்பதாகவும் ஒரு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளார்கள். இந்த செய்தி வெளியானதை அடுத்து பூர்ணிமா ரவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.