தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜன.,12ம் தேதி ரிலீசானது.
இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பைப் பெற்றது. ஆனால், தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் கதை நடிகரும் எழுத்தாளருமான வேலராமமூர்த்தி எழுதிய 'பட்டத்துயானை' நாவலின் கதையை திருடி எடுக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். வேல ராமமூர்த்தி, குற்ற பரம்பரை, குருதி ஆட்டம், அரியநாச்சி உள்ளிட்ட பல நாவல்களுக்காகவும் புகழ்பெற்றவர்.
இவர் எழுதிய 'பட்டத்து யானை' என்ற நாவல் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தார் மூலம் புத்தகமாக வெளியாகியிருந்தது. கேப்டன் மில்லர் திரைப்படம் தன்னுடைய நாவலில் இருந்து கதையை திருடி எடுக்கப்பட்டதாக வேல ராமமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: 'கேப்டன் மில்லர் படத்தின் கதை எனது 'பட்டத்துயானை' நாவலை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாக கேள்விப்பட்டேன். இதெல்லாம் செய்ய அசிங்கமா இல்லையா? பட்டத்துயானை நாவலை எழுதிய நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன். என்னிடம் ஒருவார்த்தை கேட்டிருக்கலாம் அல்லது அனுமதி வாங்கி இருக்கலாம்.
கேப்டன் மில்லர் மட்டுமல்ல இன்னும் பல படங்களிலும் எனது கதைகள், சீன்கள் திருடப்பட்டுள்ளன. ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் கூட எனது நாவலில் இருந்து சீன்கள் வைக்கப்பட்டுள்ளதாக வாசகர்கள் வேதனை தெரிவித்திருந்தனர். கேப்டன் மில்லர் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன்.
புகார் தந்தாலும்.. வலுத்தவன் பக்கம்தான் நியாயம் பேசுவார்கள். தமிழ் திரையுலகில் இப்படி அடிக்கடி நடப்பது அசிங்கமாக உள்ளது. ஒரு படைப்பாளியின் கதையை கூச்சமே இல்லாமல் திருடுகின்றனர். ஒரு படைப்பாளியாக இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.