மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிக்கும் படம் 'பிரீடம் ஆகஸ்ட் 14'. சசிகுமார் மற்றும் லிஜோமோல் ஜோஸ் நடிக்கும் இந்த படத்தை 'கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவா இயக்குகிறார். 90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு படம் தயாராகிறது. ஜிப்ரான் இசை அமைக்கிறார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
90 கால கட்டத்தை திரையில் கொண்டுவர, படக்குழு கடுமையாக உழைத்துள்ளது. 90களின் காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் பிரமாண்டமான செட் அமைத்து, படத்தின் காட்சிகளை படக்குழு படமாக்கியுள்ளது. சென்னை மற்றும் கேரளாவில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
'அயோத்தி' படத்திற்கு பிறகு சசிகுமார் இப்படத்தில் நாயகனாக, மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். ஜெய்பீம் படத்தில் கவனம் ஈர்த்த லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடிக்கிறார். பாலிவுட் சுதேவ் நாயர் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் மாளவிகா, போஸ்வெங்கட், மு ராமசாமி, ரமேஷ்கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.