திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. இரண்டாம் பாகம் மட்டும் தயாராகி வருகிறது என்று சொல்லப்பட்ட நிலையில் மூன்றாம் பாகத்தையும் சேர்த்தே படமாக்கி வருகிறார்கள் என்ற தகவல் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்ற தகவல் பரவிய நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த உள்ளார்களாம். வட சென்னை பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சுவர்களில் இந்தியன் தாத்தா ஓவியத்தை படக்குழு சார்பாக வரைந்து வருகிறார்கள்.
பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'மெட்ராஸ்' படத்தில் அந்த 'ஒற்றை சுவர்'தான் படத்தின் மையக் கருவாக இருக்கும். அது போன்ற குடியிருப்புகளில் அடுத்தடுத்த கட்டிடங்களில் விதவிதமான இந்தியன் தாத்தா உருவங்கள் வரையப்பட்டு வருகிறது.
இந்தியன் தாத்தா யார் என்பதைப் பற்றிய பாடலை அந்தப் பின்னணியில் படமாக்க இருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.