மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக உருவாகியுள்ள 'ஆடுஜீவிதம்' வரும் மார்ச் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 30 வருடங்கள் கழித்து மீண்டும் மலையாள திரையுலகில் இந்த படத்தின் மூலம் ஏ.ஆர் ரஹ்மான் மறுபிரவேசம் செய்துள்ளார். கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.
எழுத்தாளர் பென்யமின் என்பவர் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இதன் புரோமோஷன் நிகழ்ச்சிகளும் துவங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக ஆடுஜீவிதம் படத்திற்கான வெப்சைட்டை தொடங்கியுள்ளனர். இதன் துவக்க விழா நிகழ்வின் கலந்து கொண்டு இந்த வெப்சைட்டை துவங்கி வைத்தார் ஏ.ஆர் ரஹ்மான்.
அப்போது அவர் பேசும்போது, “மலையாளத்தில் யோதா படத்திற்கு பிறகு 30 வருடங்கள் கழித்து மீண்டும் திரும்பி உள்ளேன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பஹத் பாசில் நடித்த மலையான் குஞ்சு என்கிற படத்திற்கு இசையமைத்து இருந்தேன். ஆனாலும், ஒரு இசையமைப்பாளருக்கான படம் என்றால் அது ஆடு ஜீவிதம் படம் தான். அந்த அளவிற்கு படம் முழுவதுமே இசைக்கு வேலை வைக்கும் விதமாக உணர்வுபூர்வமான காட்சிகள் அதிகம்” என்று கூறியுள்ளார்.